சட்டப்பேரவைக்கு ஹெல்மெட் மற்றும் நம்பர் பிளேட் இன்றி ஸ்கூட்டரில் வந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு அபராதம்!

 
puducherry

 

புதுச்சேரியில் அரசு கார் ஓட்டுநர் ஒதுக்கப்படாததைக் கண்டித்து, முத்தியால்பேட்டை தொகுதி ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தனது நீல நிற வெஸ்பா இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு வருகை தந்தார்.

அவர் ஓட்டி வந்த அந்த புதிய இருசக்கர வாகனத்தின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் வாகனப் பதிவு எண் அல்லது நம்பர் பிளேட் பொருத்தப்படவில்லை. மேலும் அவர் ஹெல்மெட் அணியாமலும் வாகனம் ஓட்டி வந்துள்ளார்.

ஹெல்மெட் மற்றும் நம்பர் பிளேட் இன்றி பைக்கில் வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ; அபராதம் விதித்த காவல்துறை

விதிமுறைகளை மீறியதற்காக போக்குவரத்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அவருக்கு ஆன்லைன் மூலம் ஸ்பாட் சலான் வழங்கியது. ஹெல்மெட் அணியாததற்கு ரூ. 1,000 மற்றும் நம்பர் பிளேட் இல்லாததற்கு ரூ. 500 என மொத்தம் ரூ. 1,500 அபராதம் விதிக்கப்பட்டது.