அண்ணா பல்கலைக்கழகத்தைக் கண்டித்து உதவி பேராசிரியர்கள் போராட்டம்!

 
அண்ணா பல்கலைக்கழக
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி வரன்முறை கேட்டு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து அடையாள போராட்டம் நடத்தினர். 

போராட்டம் தொடர்பாக  அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரி தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்புக் கல்லூரிகளிலும் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் இணைப்பு கல்லூரிகளிலும் 450 உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் தொகுப்பூதிய உதவி பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்தின் மூலம் தொகுப்பூதியமாக ரூபாய் 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வேறு எந்த விதமான பணிப்பலனும் வழங்குவதில்லை. அதைப்போல் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதியமாக வெறும் ரூபாய் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. அடிமட்டக் கூலி வேலைக்கான சம்பளம் தான் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. அரசு சலுகைகளில் முக்கியமானதும் அவசியமானதும், பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை என்பதுதா.அதுகூட வழங்கப்படுவது கிடையாது.

கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தி வருகிறது. மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு வெறும் சொற்ப ஊதியத்தை உயர்வாக வழங்கி ஏமாற்றி விட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் ஆசிரியர்களுக்கான அடிப்படை உரிமைகள் எதையும் வழங்க முன்வரவில்லை ஆசிரியர்களை நவீன கொத்தடிமைகளாக பயன்படுத்துகின்றனர்.

பணிப் பாதுகாப்பு இல்லாததால் முறைப்படி ESI, PF கிடையாது. இவர்களில் பல பணியாளர்கள் பணியின் போது தங்கள் இன்னுயிரை இழக்க நேர்ந்தால் அவர்களுக்கு எந்த பிரதிபலனும் உதவியும் பல்கலைகழகத்திடமிருந்து வழங்கப்படுவதில்லை. வாழ்க்கையின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் வாங்கிய கடன், பிள்ளைகளின் படிப்புச் செலவு ஆகியவற்றை ஈடு செய்ய இந்த அடிமாட்டுக் கூலி போதாததால் பணியை முடித்துக் கொண்டு swiggy, Zomato, பெட்ரோல் பங்க் போன்ற உதிரி தொழில்களில் ஈடுபடுகின்றனர். 

எங்களின் பலர் மிகுந்த மன அழுத்தத்திலும் மனவேதனைகளிலும் இருக்கின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் கடிதம் வாயிலாக ஊதிய உயர்வு தொடர்பாக பலமுறை தெரிவித்து எந்த பலனும் அளிக்காத காரணத்தினால் நாங்கள் இப்போது இந்த ஒரு நாள் அடையாள போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!