ரூ.1,200 கோடி செலவில்.. 20,00,000 சதுரடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் - முதல்வர் விஜய் அறிவிப்பு!

 
தலைமை செயலகம் விஜய்

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் எனச் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். சென்னையில் சுமாா் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படவுள்ளது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

இந்த நிர்வாக வளாகமானது மேம்பட்ட தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் தடையின்றி சென்றுவரும் வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட  தரநிலைகளுக்கு உட்பட்டு அமைக்கப்படவுள்ளது. போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான பல்வேறு நவீன வசதிகள் இதில் ஏற்படுத்தப்படும்.  இந்த புதிய வளாகத்தின் மூலமாக அனைத்து அரசுத் துறைகளும் ஒரே நிர்வாகக் கட்டடத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு முழுமையாக ஒருங்கிணைக்கப்படும்.