ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி!

 
படகு கவிழ்ந்து

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் இருந்து ஏமன் நோக்கிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிபூட்டியில் இருந்து ஏமன் நாட்டை நோக்கி 200-க்கும் மேற்பட்ட சட்டவிரோதப் புலம்பெயர்ந்தோருடன் ஒரு படகு புறப்பட்டுள்ளது. ஜிபூட்டியின் குஹேரே பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆற்றில் மூழ்கி

இச்சம்பவத்தில் 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்தனர். மேலும், 116-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர். விபத்தில் சிக்கிய எத்தியோப்பியாவைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், கடலில் மாயமானவர்களைத் தேடும் தீவிர மீட்புப் பணிகள் அப்பகுதியில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.