லாரிகளுக்கு இடையே கார் நசுங்கி கோர விபத்து - 11 பேர் பலி!

 
லாரி லாரி

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த லாரி ஏற்படுத்திய தொடர் விபத்துகளால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, மிர்சாபூர் மாவட்டம் திராமண்ட்கஞ்ச் பகுதியில் இருந்து லசோடா நோக்கிச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, தனக்கு முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது அதிவேகமாக மோதியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

முன்னால் சென்ற லாரிக்கும், பின்னால் வந்த லாரிக்கும் இடையில் ஒரு கார் சிக்கிக்கொண்டது. இரண்டு கனரக வாகனங்களுக்கு இடையில் சிக்கிய அந்த கார் அப்பளம் போல் நசுங்கியது. இதைத் தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு காரும் இந்த விபத்தில் சிக்கியது. மோதிய வேகத்தில் வாகனங்கள் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கின.

மிர்சாபூர் மாவட்ட எஸ்பி அபர்ணா ரஜத் கவுசிக் தெரிவித்துள்ள தகவல்களின் படி, இந்த விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 9 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து!

விபத்தில் சிக்கிய லாரிகளில் ஒன்று பீகார் மாநிலப் பதிவு எண்ணையும், மற்றொன்று மத்தியப் பிரதேசப் பதிவு எண்ணையும் கொண்டிருந்தன. தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.