நேபாளத்தில் மீண்டும் கனமழை, வெள்ளப்பெருக்கு: 14 பேர் பலி - பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிப்பு!

 
நேபாள்

நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இயற்கைச் சீற்றத்தால் இதுவரை 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர் மழையால் பல பகுதிகளில் திடீர் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் வீடுகளும் வாகனங்களும் சிக்கியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இமயமலை பனிப்பாறை பேரழிவு நேபாள்

நாட்டின் முக்கிய நதியான நாராயணி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டிச் சென்றுள்ளதால், நதிக்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சித்வான் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல முக்கியப் பாலங்கள் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், பல்வேறு மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துத் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

நேபாள்

நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகமும் நீர்மின் நிலையங்களின் செயல்பாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.