குழந்தைகள் உள்பட 16 பேர் பலி... காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

 
இஸ்ரேல்

காசாவில் அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காசா - இஸ்ரேல்

இஸ்ரேல்-காசா இடையே கடந்த ஆண்டு தொடங்கிய போர் 11 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பாலஸ்தீனியர்கள் தரப்பில் இதுவரை சுமார் 41 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. 

காசா

எனினும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தநிலையில் காசாவில் உள்ள அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web