ஆப்கானிஸ்தானில் பதுங்கு குழிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் - 28 பேர் பலி!
கிழக்கு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளைக் குறிவைத்துப் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் போர் விமானங்கள் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

எல்லை கடந்த பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இத்தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகக் கூறி ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் தொடர்ந்து மோதல்களும் பதற்றமான சூழலும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
