குழந்தைகள், முதியவர்கள் உட்பட 48 பேர் பலி - மேற்கு ஆப்பிரிக்காவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்!

 
மேற்கு ஆப்பிரிக்கா பயங்கரவாதிகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் மேனகா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலி நாட்டு ராணுவத்தினருக்குப் பொதுமக்களில் சிலர் ரகசியத் தகவல் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி, ஐ.எஸ். பயங்கரவாதிகள் கிராமத்தின் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். நேற்றிரவு தொடங்கிய இந்தத் தாக்குதல் விடிய விடிய இன்று காலை வரை நீடித்தது.

நைஜீரியா துப்பாக்கிச்சூடு பயங்கரவாதிகள்

இந்தக் கோரத் தாக்குதலில் பொதுமக்களில் பலரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர்.