அட... 108 வயதில் வீதி, வீதியாக சென்று வண்டியில் காய்கறி வியாபாரம்!

எப்பவுமே வயசுங்கறது எண்ணிக்கை மட்டும் தான். உடம்புக்கு கிடையாது. அதற்கு ஓய்வே தேவையில்ல என்பது மாதிரி தான் பலரும் தினமும் எத்தனை வயதானாலும் வேலையை செய்து கொண்டே உள்ளனர். வயதான பிறகு வீட்டிலேயே இருக்காமல் உழைத்து சாப்பிட வேண்டும் பிறரை சார்ந்து வாழக்கூடாது என்பதை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் முதியவருக்கு வயது 108 என்கின்றனர். இவர் இந்த தள்ளாடும் வயதிலும் குடும்பத்தினரை சார்ந்திருக்க தயாராக இல்லை. தானே காய்கறி வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார். ஓய்வெடுக்க வேண்டிய வயதில் தெருவில் வண்டியில் காய்கறிகள் வைத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று விற்று வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
இன்றைய இளைய தலைமுறைக்கு அதிக தன்னம்பிக்கை மற்றும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார். இந்த முதியவர் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியான மூன்றே நிமிடத்தில் 3 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!