அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

 
அத்திக்கடவு
 

ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக அந்த மாவட்ட மக்களின் கனவு திட்டமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த 1,045 குளம், குட்டைகளில் நீா் நிரப்பி அதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கும், விவசாயம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தொடங்கப்பட்ட திட்டம் தான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்.

Athikadavu-Avinasi project


இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2016ம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடா் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆய்வுப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ. 3.27 கோடியை ஒதுக்கீடு செய்து, அதனைத் தொடர்ந்து அரசாணையும் வெளியிட்டாா்.
அதன் பின்னரும் திட்டம் வேகமெடுக்காத நிலையில், அவிநாசியில் 2017ம் ஆண்டு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி  ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து 2018ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இன்றைக்கு ரூ. 1,916.41 கோடி நிதியில் இந்தத் திட்டம் முழுமை அடைந்துள்ளது.

அத்திகடவு
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளாகியும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை திறந்து வைக்கவில்லை என அதிமுகவினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர். 
இந்தத் திட்டத்தை தொடங்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 20ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!