பெண் வேடத்தில் வந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக் கொள்ளை - தெலுங்கானாவில் பரபரப்பு!

 
ஏடிஎம் கொள்ளை

தெலுங்கானா மாநிலத்தில் நைட்டி அணிந்து பெண் வேடத்தில் வந்த மர்ம நபர்கள், கியாஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் காந்தாரி மண்டலப் பகுதியில் உள்ள சாலையோர ஏ.டி.எம். மையத்தில் நள்ளிரவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அடையாளத்தை மறைப்பதற்காக நைட்டி அணிந்து பெண் வேடத்தில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த கியாஸ் கட்டரைப் பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை அதிரடியாக உடைத்துள்ளனர். பின்னர் அதில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பியோடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, பெண் வேடத்தில் வந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.