அரபிக்கடலில் வளிமண்டலச் சுழற்சி... இன்றிரவு 30 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!

 
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி! மேலும் 2 தினங்களுக்கு தொடரும் மழை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல் மற்றும் கேரளா கடலோரப் பகுதிகளுக்கு மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் மேகக் கூட்டங்கள் திரண்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று மாலை முதல் இரவு 7 மணி வரை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

தீபாவளி

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உடனடி முன்னறிவிப்பின்படி வட மற்றும் மத்திய மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மேற்கு மற்றும் உள் மாவட்டங்களான சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடி மின்னல் சமயங்களில் திறந்தவெளிகளில் நிற்பதைத் தவிர்த்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.