வளிமண்டல சுழற்றி... சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் புதிய எச்சரிக்கை!

 
மழை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகப் பல மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னல் மழை

இலட்சத்தீவு பகுதிகள் முதல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை மற்றும் வளிமண்டலச் சுழற்சிகளின் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி! மேலும் 2 தினங்களுக்கு தொடரும் மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் இடைஇடையே ஓரிரு முறை மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களுக்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை தொடரும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.