ஹைஃபா மீது தாக்குதல்... கச்சா எண்ணெய் விலை உயர்வு - இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா?

 
ஓபெக் கச்சா எண்ணெய் க்ரூட் ஆயில் ஓபெக் கச்சா எண்ணெய் க்ரூட் ஆயில்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், குறிப்பாக இஸ்ரேலின் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதல் போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேற்று மார்ச் 19பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $116 வரை உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி இது $107 முதல் $108 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஈரான் - இஸ்ரேல் இடையிலான நேரடித் தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் விநியோகத் தடை ஏற்படலாம் என்ற அச்சமே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

கச்சா

சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களைக் கவனித்து வருவதாகவும், உடனடியாக சில்லறை விலையை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து $100-க்கு மேல் நீடித்தால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிசெய்ய லிட்டருக்கு ₹2 முதல் ₹5 வரை விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈரான் எண்ணெய் கிடங்கு தீ

கச்சா எண்ணெய் விலை 10% உயரும்போது, இந்தியாவின் பணவீக்கம் (Inflation) சுமார் 0.30% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்தால் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்து, காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடும்.

இன்றைய விலை நிலவரம் (சென்னை & முக்கிய நகரங்கள்):

நகரம்

பெட்ரோல் (1 லிட்டர்)

டீசல் (1 லிட்டர்)

சென்னை

₹101.23

₹92.61

மும்பை

₹103.54

₹90.03

புது தில்லி

₹94.77

₹87.67

பெங்களூரு

₹102.96

₹90.99