சவுதி அரேபியா விமான நிலையம் மீது தாக்குதல்... ஒருவர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
சவுதி தாக்குதல்

சவுதி அரேபியாவின் முக்கிய நகரமான தம்மாமில் உள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் அமைந்துள்ள தம்மாம் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நேற்று திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துச் சவுதி சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்: விமான நிலையம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹவுதி சவுதி சவூதி தாக்குதல்

இச்சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் சிலருக்குப் பலத்த காயங்களும், சிலருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன. விமான நிலைய வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் தாக்குதலுக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.