ஜேஎன்யு பல்கலை.யில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்.. ஏ.பி.வி.பி அமைப்பினர் கொடூரம்

 
தமிழ்

மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் சென்றனர்.

மும்பையில் ஐஐடியில் மாணவர் தர்ஷன் சொலான்கி பி.டெக் பயின்று வந்து இருக்கிறார். அவர் கடந்த 12 ஆம் தேதி ஐஐடி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சொலான்கி மரணத்துக்கு நிறுவன படுகொலையே காரணம் என்று மும்பை ஐஐடியில் செயல்பட்டு வரும் APPSC எனப்படும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் என்று தெரிவித்தது.

இந்த நிலையில்தான் அவரது மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் போராடி இருக்கிறார்கள். பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்ற விளிம்புநிலை மக்களுக்கா போராடிய தலைவர்களின் படங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாணவர்களுடன் அங்கு பயின்ற தமிழ் மாணவர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சத்ரபதி ஷிவாஜியின் படம் சேதம் அடைந்தது.

தமிழ்

இதற்கு சொலான்கி மரணத்துக்கு நீதி கோரி ஊர்வலம் சென்ற இடதுசாரி மாணவர் அமைப்பினர்தான் காரணம் என்று கூறி அவர்கள் மீது பாஜகவின் மாணவர் அமைப்பினரான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர்.

அத்துடன் அவர்கள் வைத்து இருந்த தந்தை பெரியார் படத்தையும் அவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏபிவிபி மாணவர் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஒரு தமிழ் மாணவரின் மண்டை உடைக்கப்பட்ட ரத்த வழிந்தோடியது. மற்றொரு மாணவருக்கு உடலின் பல பாகங்களில் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழ்

அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்ததாகவும், அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸையும் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தாக்கியதாகவும் அதை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web