இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி - வீட்டுவாசலில் விபரீதம்!

 
பெட்ரோல்

சென்னை கொருக்குப்பேட்டையில் வீட்டு வாசலில் தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொல்ல முயன்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் மோகனா என்ற பெண் தனது வீட்டு வாசலில் மகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது, அங்கு பைக்கில் வந்த ஷாஹின்ஷா என்ற இளைஞர் திடீரென மோகனா மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பியோடினார்.

பாதிக்கப்பட்ட மோகனாவின் கணவர் மாணிக்கத்துடனான முன்விரோதம் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இத்தாக்குதலில் முகம் கருகிய நிலையில் பலத்த காயமடைந்த மோகனா, உடனடியாக மீட்கப்பட்டுச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஷாஹின்ஷாவைத் தீவிரமாகத் தேடி விரைந்து கைது செய்தனர்.