"அமைச்சர்களிடம் பதில் இருந்தால் மட்டுமே கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு அனுமதி" - சபாநாயகரிடம் செங்கோட்டையன் கோரிக்கை!

 
சபாநாயகர் செங்கோட்டையன் ஜேசிபி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் சபாநாயகரிடம் முக்கியக் கோரிக்கை ஒன்ற முன்வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் பொதுமக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் அதற்கான சரியான பதில்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை அறிந்து கொண்டு, அதன்பிறகே எதிர்க்கட்சிகளின் தீர்மானங்களுக்குச் சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும் எனச் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.

செங்கோட்டையன்

மின் கட்டண உயர்வு தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது, சம்பந்தப்பட்ட அமைச்சர் அவையில் இல்லாததால் பதில் அளிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட சூழல் நிலவியது.

அமைச்சர்களிடம் உடனடி பதில் இல்லாத காரணத்தால் மக்கள் பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் தாமதமாவதைத் தவிர்க்கும் வகையிலேயே, இந்தத் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.