மாணவர்களின் கவனத்திற்கு.. கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிப்பு..!!
Nov 14, 2023, 20:22 IST

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு 5 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. மேலும் கடலூர் மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறி ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
சென்னை முழுவதும் இன்று காலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை(15.11.23) சென்னை மாவட்டம் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
From around the
web