ஆடி தபசு: ராமேஸ்வரத்தில் இன்று இரவு ஆடி திருக்கல்யாண உற்சவம்!

 
ஆடித்தபசு
 

ராமேசுவரம் கோயிலில் ஆடித் தபசு விழாவையொட்டி நேற்று இரவு அம்பாள், சுவாமி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவான முக்கிய நிகழ்வாக இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் 17 நாட்கள் நடைபெறும் ஆடித்திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் கடந்த ஜூலை 27ல் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் பர்வத வர்த்தினி அம்பாள் வாகனங்களில் எழுந்தருளல், திருவிளக்கு பூஜை, தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆடித்தபசு
திருவிழாவின் 11வது நாளான நேற்று ஆடித் தபசு விழாவினையொட்டி அதிகாலை 2 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகளுக்கு பிறகு பர்வதவர்த்தினி அம்பாள் காலை 5.55 மணிக்கு வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டகப்படியில் எழுந்தருளினார். அதன்பின் காலை 11 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் ராமநாத சுவாமி தபசு மண்கபடியில் எழுந்தருளினார். பகல் 3.30 மணியளவில் தபசு மண்டகபடியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.

இரவு 7 மணியளவில் அனுமார் சன்னதியில் நிச்சயதார்த்தமும், இரவு 9 மணியளவில் அம்பாள் தங்கப்பல்லக்கில் தபசு மண்டபடியில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கி நிகழ்வாக இன்று ஆகஸ்ட் 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம் இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள், கோயில் தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மேடையில் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும், ராமநாத சுவாமிக்கும் நடைபெற உள்ளது

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா