16 பேறுகளை அள்ளி வழங்கும் ஆடி செவ்வாய் விரதமுறை!

ஆடி செவ்வாய் தேடி குளி என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. ஆடி செவ்வாயில் அம்பிகை வழிபாடு வாழ்வில் எல்லா வளங்களையும் கிடைக்கச் செய்யும். இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வேண்டிய வரம் கிட்டும். ஆடி செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். பூஜையறையை நீரால் கழுவி சுத்தம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பழங்கள் மற்றும் பாலை நீங்கள் வணங்கும் இறைவனுக்கு நிவேதனம் செய்யலாம்.
வீட்டில் உள்ள சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். அதே போல் ஜாதக கட்டத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம், இப்படி எந்த தோஷங்கள் இருப்பவர்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஆடி செவ்வாயில் வீட்டு பூஜையறையில் 2 குத்துவிளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். குல தெய்வத்தை வணங்கிய பின்பு இந்த ஆடி செவ்வாயில் நீங்கள் வழிபட இருக்கும் இறைவனை வேண்டி அன்றைய தினம் முழுதும் உபவாசம் இருக்கலாம். இயலாதவர்கள் பால், பழம் உண்ணலாம்.
இந்த விரதம் உடலுக்கும், மனதுக்கும் நன்மையை தரும் . உடல் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுடைய விரதத்தை அமைத்துக்கொள்ளலாம். சுத்தமான மனதோடு விரதம் இருக்க வேண்டும் என்பதே இதில் மிக முக்கியமானது. செவ்வாய் மாலை வேளையில் அம்பிகைக்கு சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி இவைகளில் ஏதாவது ஒரு இனிப்பை செய்து நைவேத்தியம் செய்யலாம்.
வாழை அல்லது வெற்றிலையில் அம்பிகை நாமாவளிகள், போற்றிகள் சொல்லி குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த குங்குமத்தை 11 சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கலாம். இதனை ஆடி செவ்வாய் கிழமைகளில் செய்து வருவதால் கன்னிப்பெண்கள் திருமண யோகம் பெறுவார்கள். குழந்தைப்பேறு, கல்வி , கேள்விகளில் மேன்மை , தொழில் வளர்ச்சி, உடல் ஆரோக்கியம், செல்வம் என சகல நன்மைகளும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆடி செவ்வாயில் மனமுருகி அம்பிகையை பிரார்த்திப்போம். அவளின் பேரருளை பெறுவோம்.
ஓம் சக்தி!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?