ஆக.17 கடைசி தேதி... அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்புகளுக்கான விண்ணப்பதிவு தொடங்கியது!

 
அண்ணா பல்கலைக் கழகம்

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் வழங்கும் முதுகலை வணிக மேலாண்மை  பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை ஆன்லைனில் தொடங்கியுள்ளது.

'எம்.பி.ஏ. பொது மேலாண்மை' மற்றும் 'எம்.பி.ஏ. வணிக பகுப்பாய்வு' ஆகிய இரு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

அண்ணா பல்கலை கழகம்

இந்த எம்.பி.ஏ. படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 23 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்புகளில் சேர விரும்புவோர் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான onlinecde.annauniv.edu அல்லது cde.annauniv.edu ஆகிய முகவரிகளில் சென்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.