ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள  பனிமய மாதா பேராலயம் உலக பிரசித்தி பெற்றது.  இந்த ஆலயத்தின் 441 வது திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது. திருவிழாவை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தூத்துக்குடிக்கு  ஏராளமானோர் வருகை தந்துள்ளனர்.   10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், இலங்கை, சிங்கப்பூர்  வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.   போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது.  

தூத்துக்குடி பனிமயமாதா

சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, இன்று ஜூலை 26ம் தேதி  முதல்   ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். சனிக்கிழமை காலை அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 7.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடத்தப்பட்டு  ஆலயம் எதிரே அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடிக் கம்பத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்தது.  இந்தத் திருவிழா  உலக நன்மை, உலக சமாதானம், கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைவருக்கமான  விசேஷ திருப்பலிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி விழாவின் 10ம் நாளில் நடைபெறும்.  

உள்ளூர் விடுமுறை

கொடிக்கம்பம் முன் பால், பழம், பேரீச்சம்பழம் நேர்ச்சை பொருட்களாக படைக்கப்பட்டு   பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.இந்த திருவிழா குறித்து   பேசிய பேராலய அதிபரும், பங்குத்தந்தையுமான குமார் ராஜா "தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது.  தூத்துக்குடி மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது.   தங்கத்தேர் பவனி வருகிற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நடக்கிறது.  திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.  ஆகஸ்ட் 5ம் தேதி பனிமய மாதா தேர்ப்பவனி  திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web