ஆகஸ்ட் 9ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் . திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவிலில்  கிருத்திகை, சஷ்டி என முருகனின் விழாக்கள் அனைத்தும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில்,ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 11 வரை தொடர்ந்து  5 நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவில், இன்று ஆடி அஸ்வினி திருவிழாவும் நாளை ஆடி பரணி திருவிழாவும் நடைபெறுகின்றன.  

திருத்தணி

முக்கிய நிகழ்வான ஆடிக்கிருத்திகை ஆகஸ்ட் 9ம் தேதிஅனுசரிக்கப்படுகிறது. அன்று இரவு முதல் தொடர்ந்து 3 நாட்கள் ஆகஸ்ட் 11 வரை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.இந்த திருவிழாவை கண்டுகளிக்க தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்தும்  பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பால் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், தலைமுடி காணிக்கையை செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர்.

உள்ளூர் விடுமுறை

  திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web