சொந்த அத்தைன்னு கூட பார்க்கலை... கை, கால்களைக் கட்டி... ச்சீ... கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
சொந்த அத்தை என்று கூட பார்க்காமல் இளைஞர் கொலைச் செய்தது தெரிய வந்து உறவினர்கள் அதிர்ந்தனர். சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், சமூக விரோத செயல்களும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடியின் மனைவி பவுனுத்தாய் (வயது 58). கணவர் இறந்து விட்டதால் பவுனுத்தாய் மரிகுண்டு கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி, அவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்டு, ரத்த காயங்களுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் நேற்று தேனி அருகே பழனிதேவன்பட்டியை சேர்ந்த ரமேஷ் மகன் அருண் (25) என்பவர் பவுனுத்தாயை கொலை செய்ததாக கூறி மதுரை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை கண்டமனூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அருண் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- தேனியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறேன். பவுனுத்தாய் எனக்கு சொந்தம் அத்தை. அதனால் அடிக்கடி அவரிடமிருந்து செலவுக்கு பணம் வாங்கி திரும்ப கொடுத்தேன். இந்நிலையில் எனது தொழில் எதிர்பார்த்தபடி நடக்காமல் நஷ்டம் அடைந்தேன்.
இதனால் மீண்டும் தொழில் தொடங்க பணம் தேவைப்பட்டது. இதற்காக ரூ.2 லட்சம் தருமாறு பவுனுத்தாயிடம் கேட்டேன். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்றும், உங்கள் பெற்றோர் உறுதியளித்தால் நகையை தருவதாகவும் நகை மட்டும் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து எனது பெற்றோரிடம் அனுமதி பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். அப்போது அவர் 12 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு வந்தார்.
நான் அவரை அழைத்துக் கொண்டு வேறு வழியே செல்வதைப் பார்த்து, ஏன் வேறு வழியில் செல்கிறாய் என்றார். இந்த பக்கமாக சென்றால் சீக்கிரம் வீட்டுக்குப் போய் விடலாம் என்று கூறி அழைத்துச் சென்றேன். அவருக்கு சந்தேகம் வந்து விட்டது. என் பேச்சைக் கேட்காமல் ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்தார். அதன் பிறகு நான் அவரை கன்னத்தில் அறைந்தேன். அவர் வைத்திருந்த நகைகளைக் எடுத்துக் கொண்டு, அவருடைய கை கால்களை கட்டி கிணற்றில் போட்டேன். சிறிது நேரம் கிணற்றின் அருகிலேயே நின்றிருந்து, அவர் இறந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டு அதன் பின்னர் அங்கிருந்து சென்றேன்.
போலீசார் என்னைத் தேடி வருவது தெரிந்ததும், எப்படியும் அவர்களிடம் சிக்கி விடுவோம் என்று பயந்து கோர்ட்டில் சரணடைந்தேன் என்று கூறி மொத்த உறவினர்களையும் அதிர செய்திருக்கிறார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!