பணம், நகையுடன் செழிப்பாக வாழ்ந்து வந்த சித்தி.. ஆட்டைய போட இளம்பெண் செய்த கொடூரம்!

 
சுசித்ரா

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்எம்சி யார்டு காவல் நிலையம் அருகே அன்னம்மா வசித்து வருகிறார். குழந்தை இல்லாததால் வீடு கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறார். சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை வீட்டில் வைத்திருந்தார்.  அன்னம்மாவின் அக்கா மகள் சுசித்ரா. அடிக்கடி பாட்டி வீட்டுக்கு செல்வார். அப்போது அன்னம்மா வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டார். தனது இரண்டாவது கணவர் முனிராஜுடன் சேர்ந்து அன்னம்மாவை எப்படிக் கொல்ல வேண்டும் என்று திட்டமிடுகிறார்.

பெங்களூரு

கடந்த வாரம், கோர்குண்டே பால்யாவின் கல்லறைக்கு செல்ல சுசித்ரா தனது சித்தி அன்னம்மாவை அழைத்தார். அப்போது அங்கு வந்த அன்னம்மாவை முனிராஜு கைத்துப்பாக்கியால் சரமாரியாக தாக்கினார். இதில் அன்னம்மா மயங்கி விழுந்தார். இறந்து விட்டதாக நினைத்து சுசித்ராவும், முனிராஜும் அன்னம்மா வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு ஓடினர். மயங்கி விழுந்த அன்னம்மா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பலனாக அன்னம்மா இப்போது உயிருடன் இருக்கிறார்.

இதுகுறித்து அன்னம்மா ஆர்எம்சி யார்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடியபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. அவர்கள் ஹாசன் மாவட்டம் சகேலஷ்புராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சுசித்ராவையும், அவரது இரண்டாவது கணவர் முனிராஜையும் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அன்னம்மாவை கொல்ல அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக 15 வயது மகனை அன்னம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அன்னம்மா தூங்கிக்கொண்டிருந்தபோது சுசித்ராவின் 15 வயது மகன் தலையணையை அன்னம்மாவின் முகத்தில் அழுத்தினான்.

திடீரென அன்னம்மா முழித்து கொண்டதால் முகத்தில் அமர்ந்திருந்த கரப்பான் பூச்சியை தலையணையால் விரட்டியதாக கூறி தப்பியது தற்போது தெரியவந்தது. அதன்பின், நகை, பணத்தை எங்கு வைத்துள்ளனர் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது 15 வயது மகனும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். நகை மற்றும் பணத்திற்காக சித்தியை  கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web