நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீன்!

 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீன்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வீரரான கேமரூன் கிரீன், தனது நீண்டகாலக் காதலியான எமிலி ரெட்வுட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கேமரூன் கிரீன் - எமிலி ரெட்வுட் திருமணம் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிய மற்றும் கலகலப்பான முறையில் நடந்துள்ளது.

திருமண நிறைவுக்குப் பிறகு, அந்தச் சிறப்பு நாளின் மகிழ்ச்சியான தருமங்களை வெளிப்படுத்தும் பல அழகிய புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கேமரூன் கிரீனுக்கு, சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.