ஆட்டோ ஓட்டுநரின் மனைவிக்கு முத்தம் கொடுத்து எஸ்கேப்.. பாஜக நிர்வாகிக்கு வலைவீச்சு!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பத்துகாணி குமாரபவன் பகுதியைச் சேர்ந்தவர் அனிக்குட்டன் என்கிற அனில்குமார் (48). இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி தண்ணியா (40). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். தண்ணியா பத்துகாணி சந்திப்பு பகுதியில் தானியா மளிகைக் கடை நடத்தி வருகிறார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நாளில், அனில்குமார் தனது மனைவியின் கடைக்குச் சென்றிருந்தார். அப்போது, பத்துகாணி நிஜபவன் பகுதியைச் சேர்ந்த மதுகுமார் (52) என்ற பாஜக நிர்வாகி தானியாவை முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அனிக்குட்டன், தனது மனைவியைக் கண்டித்து, பாஜக நிர்வாகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த மதுகுமார், அனில்குமாரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக அனில்குமார் ஆறுகாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மதுகுமாரைத் தேடி வருகின்றனர். தலைமறைவான மதுகுமார் பாஜகவின் ஆறுகாணி கிளைச் செயலாளராக இருந்து கடையாலுமூடு பேரூராட்சி 9வது வார்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!