ரூ.30 பணத்துக்காக இளைஞர் படுகொலை... நண்பர் வெறிச்செயல்!
ரூ.30 பணத்துக்காக எல்லாம் கொலைச் செய்வார்களா? பணம் பத்தும் செய்யும் என்பதை நிஜமாக்கும் வகையில், ரூ.10க்காக எல்லாம் கொலைச் செய்வார்கள். அந்தந்த நிமிஷத்து கோபம் என்கிறார்கள் உளவியலாளர்கள். உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சைஃப் ஜாஹித் அலி மற்றும் சகன் அலி. இருவரும் மும்பையில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நேற்றிரவு இருவரும் மது அருந்துவதற்காக ஒன்றாக சேர்ந்து குர்லாவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ஆட்டோவில் சென்றனர்.

அங்கு, ஆட்டோவுக்கு, 30 ரூபாய் கொடுப்பது தொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் இறுதியில் முஷ்டி சண்டையாக மாறியது மற்றும் சகன் அலியை சைஃப் ஜாஹித் அலி தள்ளிவிட்டார். கீழே விழுந்த சகன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குர்லா போலீசார், தலைமறைவான சைப் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதையடுத்து, கல்யாண் ரயில் நிலையத்தில் இருந்து சாய்யை பிடித்த போலீசார், குர்லா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
