ஏசி முதல் ஸ்நாக்ஸ், டிவி வரை... சொகுசு ஹோட்டல் வசதிகளுடன் வலம் வரும் ஆட்டோ... .. வைரல் வீடியோ!

 
auto auto

சமூக வலைதளங்களில்  வைரலாகி வரும் ஒரு விசித்திரமான ஆட்டோ ரிக்‌ஷா, சாமானிய பயணிகளுக்குப் பிரம்மாண்டமான சொகுசு வசதிகளை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஆட்டோ பயணம் என்றாலே நெரிசலும் சத்தமும் நிறைந்ததாக இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து, இந்த ஆட்டோவிற்குள் ஏர் கண்டிஷனர் , அதிநவீன தொலைக்காட்சி, அதிவேக இணைய வசதி, குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள்   என ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் அனைத்து ஆடம்பர வசதிகளும் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளன.

நவீன வசதிகளின் பட்டியல்:
குளு குளு வசதி: கோடை வெயிலைச் சற்றும் பொருட்படுத்தாமல் பயணிக்கும் வகையில் ஏசி வசதி.

பொழுதுபோக்கு: டிஜிட்டல் திரையுடன் கூடிய டிவி மற்றும் வீடியோ உபகரணங்கள் 

இலவச வைஃபை: பயணிகள் தங்களின் பயணத்தின் போது தடையின்றிப் பயன்படுத்த அதிவேக இணைய சேவை.

மினி பார்: தாகம் மற்றும் பசியைத் தீர்க்க இலவசக் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள்.

இதனைப் பார்க்கும் சாமானிய பயணிகள், ஒரு பொதுப் போக்குவரத்து வாகனம் இவ்வளவு நவீனமாகவும், சொகுசாகவும் இருக்குமா என்று வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த ஆட்டோ ஓட்டுநரின் கடின உழைப்பும், தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவர் காட்டிய மாபெரும் அக்கறையும், தனித்துவமான சிந்தனையும் நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்து இணையத்தில் லைக்குகளைக் குவித்து வருகிறது.