டாஸ்மாக் காலி பாட்டில்களைத் திரும்பப் பெற தானியங்கி எந்திரங்கள் - ரூ. 50 கோடியில் டெண்டர் வெளியீடு!

 
டாஸ்மாக் காலி பாட்டில்

மதுபானங்களை அருந்திய பின் காலி பாட்டில்களைப் பொது இடங்களிலும் சாலையோரங்களிலும் வீசுவதைத் தடுத்து, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் நிறுவனம் புதிய தானியங்கி எந்திரங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தானியங்கி எந்திரத்தில் காலி மதுபாட்டிலைச் செலுத்தியதும் அது சரிபார்க்கப்பட்டு, நுகர்வோருக்கு உடனுக்குடன் ரூ.10 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மது பாட்டில் பீர் உடைந்த

எந்திரங்கள் மூலம் சேகரிக்கப்படும் பாட்டில்கள் வகைப்படுத்தப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு உகந்த கண்ணாடிப் பாட்டில்கள் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களுக்கே திருப்பி அனுப்பப்படும். இதர கண்ணாடி மற்றும் உலோகப் பொருட்கள் பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பாட்டில் கள்ளச்சாராயம்

இப்பணிகளைத் திறம்பட மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்காகத் தமிழக அரசு ரூ. 50 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் காலம் 7 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விண்ணப்பங்களை வரும் அக்டோபர் 5-ம் தேதி காலை 11 மணி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.