16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஆவடி இளைஞருக்கு 30 ஆண்டு சிறை!

 
thiruvallur

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 24 வயதான சதீஷுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போக்சோ நீதிமன்றம்

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், சதீஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

போக்சோ

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. மேலும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.