கோர பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி, 6 பேர் மாயம்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
ரஷ்யா

ரஷ்யாவின் வட காகசஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 11 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ரஷ்யாவின் வட காகசஸ் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற மிஷிர்ஹி மலையில் (Mount Mishirhi) ஏறுவதற்காக மொத்தம் 33 மலையேற்ற வீரர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மலையேற்றப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாகப் பனிச்சரிவு (Avalanche) ஏற்பட்டுள்ளது. இந்தச் திடீர் விபத்தில் பனிமலைச் சரிவுகளில் சிக்கி 11 மலையேற்ற வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 11 Dead, 6 Missing After Avalanche Hits Group Of Climbers In Russia's Kabardino-Balkaria in North Caucasus

இந்தக் கோர விபத்தில் சிக்கியவர்களில் 16 பேர் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பனிச்சரிவில் சிக்கித் தப்பியவர்களில் மேலும் 6 பேரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல் மாயமாகியுள்ளனர்.இதையடுத்து, மாயமான அந்த 6 பேரைக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் சுமார் 50 பேர் கொண்ட சிறப்பு மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.