அசத்தல்... டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோஹ்லி உலக சாதனை!

 
விராட் கோஹ்லி
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஐ.பி.எல்.போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 42வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது.  

அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்களும், படிக்கல் 50 ரன்களும் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 194 ரன்களே எடுத்திருந்தன.  இதனால் பெங்களூரு அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 49 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த ஆட்டத்தையும் சேர்த்து டி20 போட்டிகளில் முதல் இன்னிங்சில் விராட் கோலி 50+ ரன்கள் அடிப்பது 62வது முறையாகும். 

விராட் கோஹ்லி

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் அதிக முறை 50+ ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் பாபர் அசாம் 61 முறை 50+ ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார். 
அதன்படி  
1. விராட் கோஹ்லி - 62 முறை 
2. பாபர் அசாம் - 61 முறை 
3. கிறிஸ் கெயில் - 57 முறை 
4. டேவிட் வார்னர் - 55 முறை
5. பட்லர்/ பாப் டு பிளெஸ்சிஸ் - 52 முறை

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!