ஆயுதபூஜை பண்டிகை எதிரொலி: சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்

 
ரயில்

 

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. போத்தனூர் – பரவுனி மற்றும் திருவனந்தபுரம் வடக்கு – சந்திரகாச்சி இடையே இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயில்

போத்தனூர் – பரவுனி சிறப்பு ரயில்

ரயில் எண் 06139, அக்டோபர் 16ஆம் தேதி காலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக காலை 9 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்தில் இருந்து காலை 9.05 மணிக்குப் புறப்பட்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர் வழியாக அக்டோபர் 18ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனியைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், ரயில் எண் 06140 அக்டோபர் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பரவுனியில் இருந்து புறப்படும். இந்த ரயில் அக்டோபர் 21ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் மதியம் 2.05 மணிக்குப் புறப்பட்டு, ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக மாலை 6.30 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும்.

ரயில் ரயில்வே நெல்லை திருநெல்வேலி தூத்துக்குடி

திருவனந்தபுரம் வடக்கு – சந்திரகாச்சி சிறப்பு ரயில்

ரயில் எண் 06105, அக்டோபர் 15ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக நள்ளிரவு 2 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அதிகாலை 2.05 மணிக்குப் புறப்பட்டு, ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி வழியாக அக்டோபர் 17ஆம் தேதி மதியம் 1.45 மணிக்கு சந்திரகாச்சியைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், ரயில் எண் 06106 அக்டோபர் 18ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்படும். அக்டோபர் 19ஆம் தேதி இரவு 9.25 மணிக்கு சேலம் வந்தடையும் இந்த ரயில், இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக அக்டோபர் 20ஆம் தேதி காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடும் பயணிகள், ரயில்களின் நேரம் மற்றும் இருக்கை வசதி குறித்த விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளலாம்.