“அய்யோ... என் பையன் பொணமா தொங்குறானே... 3 நாட்களாக போலீசார் கொடுமைப்படுத்தினாங்க” - கதறும் பெற்றோர்!

 
கேரளா பைஜு தற்கொலை காதல்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரில் 18 வயது இளைஞர் முகமது அஸ்லாம் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், காவல்துறையினர் மீது அவரது குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

முகமது அஸ்லாமின் தந்தை நௌஷாத் தெரிவித்துள்ள தகவலின்படி, அஸ்லாம் ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், அதனை அப்பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலை தீவிரமாக எதிர்த்துள்ளனர். மேலும், அப்பெண்ணின் குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில், பெண்ணை மிரட்டி பணம் மற்றும் தங்கம் பறித்ததாக அஸ்லாம் மற்றும் அவரது அண்ணன் சஹால் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட்ட ஆய்வாளர் பைஜு மற்றும் எஸ்.ஐ.அதுல் மோகன் ஆகிய இரண்டு அதிகாரிகளும் தனது இரண்டு மகன்களையும் காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் சட்டவிரோதமாகக் காவலில் வைத்துத் தொடர்ந்து கொடூரமாகச் சித்திரவதை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அஸ்லாம் தாக்கப்பட்டதைக் கண்ட பிறகே, அவரது அண்ணன் பொய்யான குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

மூன்று நாட்கள் சித்திரவதைக்குப் பிறகு, செப்டம்பர் 29-ம் தேதியன்று அஸ்லாம் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு, அக்டோபர் 4ம் தேதியன்று  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் காவல் நிலையத்தில் நேர்ந்த கொடூரத் தாக்குதலால் மன உளைச்சலுக்கு ஆளான அஸ்லாம், அக்டோபர் 6-ம் தேதியன்று தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மகனின் மரணம் தொடர்பாக வாக்குமூலம் பெறக்கூடக் காவல்துறையினர் இதுவரை தங்களை அணுகவில்லை என்றும், மூத்த மகன் சஹால் இன்னமும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தந்தை நௌஷாத், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.