காதல் வலையில் சிக்கவைத்து பெண்கள் கடத்தல்? பீகாருக்கு விற்பனை செய்த தம்பதி... பரபரப்பு வாக்குமூலம் !
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரில், இளம்பெண்களைக் காதல் வலையில் சிக்கவைத்து மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆசம்கர் மாவட்டம் அஹ்ரௌலா காவல் நிலையப் பகுதியில், கடந்த மார்ச் 18-ஆம் தேதி 18 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது தாயார் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் தேடுதல் நடத்திய போலீசார், நவம்பர் 5-ஆம் தேதி அபிஷேக் ராஜ் (22), அவரது மனைவி சித்தாரா காட்டூன் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், அபிஷேக் இளம்பெண்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் செல்வதும், அவரது மனைவி மூலம் கஃபார் மியான் மற்றும் அவரது மனைவி பிந்தியா ஆகியோரிடம் ஒப்படைப்பதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் பணம் பெற்றதாகவும், பின்னர் பெண்கள் பீகாரின் பூர்ணியா சுற்றுவட்டாரத்தில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்தக் கடத்தல் வலையில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன
