வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்... மதுரை குலுங்கியது... தங்க குதிரையில் கெத்தாக வந்த அழகர்!
மதுரை மாநகரமே குலுங்குகிறது. எங்கெங்கு காணினும் திருவிழாக் கூட்டம். செம கெத்தாக தங்க குதிரையில் வந்தார் அழகர். அழகரைக் கண்டதும், பக்தர்கள் விண்ணதிர "கோவிந்தா... கோவிந்தா..." என முழக்கமிட்டனர். முன்னதாக பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் சர்க்கரை தீபம் ஏற்றியும், தீப்பந்தங்களை ஏந்தியும் அழகருக்குச் சிறப்பான 'எதிர்சேவை' அளித்துத் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

இன்று அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் சுபமுகூர்த்தத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இந்த வைபவத்திற்காகக் கள்ளழகர் கம்பீரமான தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டு கோஷமிட்டனர். மதுரை மாநகரக் காவல் துறை சார்பில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆற்றுப் பகுதியில் டிரோன்கள் மூலம் கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
