அன்றே கணித்த பாபா வாங்கா.. சொன்ன மாதிரியே இஸ்ரேஸ் போர்.. அப்போ 3 வது உலகப்போர் கன்பார்மா?

 
பா வாங்கா
2023ல் உலகப்போர் நடைப்பெற இருப்பதாக பாபா வாங்கா கணித்துள்ள நிகழ்வு தற்போது நடக்கும் சூழலை எட்டியுள்ளது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தைக் கணிக்கும் பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷடெரோவர். ஓட்டமான பேரச்சில 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார். இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல் தாக்கியதில் இவர் தனது கண் பார்வையை இழந்தார். அவரது கண் பார்வை போனாலும், அதன் பின்னரே அவரால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்ததாக அவரது பாலோயர்ஸ்கள் கூறுகின்றனர். இவர் 1996இல் மறைந்தார். 

 

இதுபோல கடந்த காலங்களில் பலர் கணித்திருந்தாலும் இவர் தனித்தே தெரிகிறார். அதற்கு முக்கிய காரணம் இவர் துல்லியமாகக் கணித்தவை எல்லாம் ஏதோ சின்ன சின்ன விஷயங்கள் இல்லை. இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு என இவர் கணித்த மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகள். அவ்வளவு ஏன் இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட விஷயங்களைக் கூட அவர் துல்லியமாகக் கணித்துள்ளார். இவரது கணிப்புகள் 80-85% வரை துல்லியமாக நடந்துள்ளது.

Blind mystic who predicted ISIS, COVID-19 says nuclear disaster impending  in 2023 | Al Arabiya English

இதற்கிடையே இந்த 2023 ஆண்டிற்கான இவரது கணிப்புகளில் 2  இப்போது முக்கியமானதாக இருக்கிறது. முதலில் அவர் இந்தாண்டு 3ம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளார். அடுத்து அணு ஆயுதங்களும் கூட பயன்படுத்தப்படும் எனக் கணித்துள்ளார். இதில் முதலாம் கணிப்பு முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இப்போது இஸ்ரேல்-ஹமாஸ் படைக்கு இடையே போர் ஆரம்பித்துள்ளது. 

இதில் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம். இது அடுத்த மூன்றாம் உலகப் போருக்கும் கூட வழிவகுக்க வாய்ப்பு இருக்கிறது. உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. ஓரிரு நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்தது. மற்ற நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் இஸ்ரேல் போரில் அப்படி இல்லை.

Israel Palestine War: Israel-Hamas war: No matter who loses, Iran wins -  The Economic Times

மேற்கு உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது. அதேநேரம் அரபு நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. போர் தொடரும் பட்சத்தில் அதில் மற்ற நாடுகள் உள்ளே வரலாம். குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் அமெரிக்கர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் நிச்சயம் அமெரிக்கா உள்ளே வரும். ஒரு வல்லரசு நாடு உள்ளே வந்தால் இது அடுத்த உலகப் போரை நோக்கிய நம்மை இட்டுச் செல்லும் என்பது வல்லுநர்கள் கருத்து. அதேபோல போர் என்று வந்துவிட்டால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தவும் வாய்ப்புகள் மிக அதிகம். இதன் காரணமாகவே எங்கு பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடுமோ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

From around the web