"குழந்தைகளுக்குப் புரதம் தேவை; சிக்கன் பிரியாணியில் அரசியலைத் திணிக்காதீங்க" - அமைச்சர் ராஜ்மோகன்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், "குழந்தைகளுக்குப் புரதம் மிகவும் அவசியம், இதில் அரசியலைத் திணிக்கக் கூடாது" எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்வியோடு உணவும் இணைந்தே வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து ஆய்வு செய்து, முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தற்போது அரசின் தீவிரப் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் விரைவில் அதிகாரப்பூர்வ முடிவை அறிவிப்பார். இத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும், சைவம் சாப்பிடும் குழந்தைகளுக்குச் சைவ உணவும், அசைவம் சாப்பிடும் குழந்தைகளுக்குச் சிக்கன் பிரியாணியும் வழங்கப்படும்.
வளர் இளம் குழந்தைகளுக்குப் புரதச்சத்து மிக முக்கியமானது. சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் குழந்தைகள் கெட்டுப் போக மாட்டார்கள். எனவே இந்த நல்ல முயற்சியில் தேவையின்றி அரசியலைத் திணிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
