4 அங்குல வாலுடன் பிறந்த அதிசய குழந்தை.. வியப்பில் மருத்துவர்கள்!

 
வாலுடன் பிறந்த குழந்தை

உலகில் பல்வேறு விசித்திரமான சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற சில சம்பவங்கள் மீண்டும் நடக்குமா என்று யோசிக்க வைக்கிறது. அண்டை நாடான சீனாவில் நான்கு அங்குல வாலுடன் பிறந்த குழந்தை பற்றிய செய்தி வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் மருத்துவ உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சீனாவில் உள்ள ஹாங்சூ குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர்கள் பின்னால் 4 அங்குல   வாலுடன் பிறந்த குழந்தையை  பிரசவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி என்றும், முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், அந்த வால் உடல் நரம்புகளுடன் இணைந்துள்ளதால் அந்த வாலை சிகிச்சையில் எடுக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையின் குழந்தைகள் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள டாக்டர் லீ, பிறந்த குழந்தையின் முதுகில் வால் இருப்பதைக் கண்டுபிடித்து, அது குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். 

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

From around the web