ரோஹித் சர்மாவுக்கு 2 வதாக ஆண்குழந்தை... குவியும் வாழ்த்துக்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா . இவருடைய மனைவி ரித்திகா. இவர்களுக்கு 6 வயதில் சமைரா என்ற பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது இத்தம்பதியினருக்கு 2 வது ஆண்குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்கள், சக விளையாட்டு வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தன் மனைவி ரித்திகாவின் பிரசவ நேரம் என்பதால் ரோஹித் இந்தியாவில் இருக்கிறார். அவர்களுக்கு நேற்று நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ரோஹித் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து ரோஹித் 22ம் தேதி நடைபெறூம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வாரா அல்லது குடும்பத்துடன் நேரம் செலவிட உள்ளாரா என்பது குறித்த தகவல்கள் இல்லை. ரோஹித் இந்தப் போட்டியில் விளையாடாத பட்சத்தில் பும்ரா அணியை வழிநடத்துவார். தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் உடன் கில், கே.எல்.ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய மூவரில் ஒருவர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
