சாக்கடை கழிவுநீரில் மிதந்த ஆண் சிசுவின் உடல் - சேலத்தில் பரபரப்பு!

 
குழந்தை வாயில் டேப்

சேலத்தில் பெய்த கனமழையின் காரணமாகச் சாக்கடை கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீரில் பச்சிளம் ஆண் சிசுவின் உடல் மிதந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் செவ்வாய்பேட்டை, குகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால், குகை லைன்ரோடு போன்ற தாழ்வான பகுதிகளில் சாக்கடை கால்வாய் நிரம்பி கழிவுநீர் ஆறாக ஓடியது.

கர்ப்பிணி குழந்தை  மாணவி இளம்பெண் கள்ளக்காதல்

மழை நின்றதை அடுத்து தொல்காப்பியன் தெருவில் பொதுமக்கள் சாக்கடை கால்வாயில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த முயன்றபோது, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் சிசுவின் உடல் இறந்த நிலையில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்துத் தகவலறிந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சிசுவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை உயிரிழப்பு

சேலத்தில் பெய்த கனமழையின் போது செவ்வாய்பேட்டை பகுதியில் இருந்து கழிவுநீருடன் அடித்து வரப்பட்டு இந்த சிசுவின் உடல் குகை பகுதிக்கு வந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்தச் செயலில் ஈடுபட்டது யார், சிசுவை வீசிச் சென்றவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.