மழைநீர் வடிகாலில் தூக்கி எறியப்பட்ட குழந்தை... கதறிய குரல் கேட்டு எட்டிப் பார்த்த பொதுமக்கள் ... பகீர் வீடியோ!

 
குழந்தை

 

திலாயரா கிராமத்தில் சாலையோர மழைநீர் வடிகாலுக்குள் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. அவ்வழியாகச் சென்ற உள்ளூர் மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகக் குழந்தையை மீட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டு உடல்நலப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆபத்தான நிலையில் குழந்தை கிடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வடிகாலுக்குள் குழந்தையை விட்டுச் சென்றது யார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், உள்ளூர் மக்களிடம் தகவல் சேகரித்தும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.