பாசக்கார பைய புள்ளைங்க ... பூனைக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த குடும்பம்..!

 
மதுரையில் பூனைக்கு வளைகாப்பு
பூனைக்கு வளைகாப்பு நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் கலைநகரை சேர்ந்தவர் குருசாமி (வயது 41). இவரது மனைவி நாகலட்சுமி(39). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும் நாய், பூனை உள்ளிட்ட செல்லபிராணிகளையும் இவர்கள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூனை ஒன்றை வெளி மாநிலத்தில் இருந்து விலைக்கு வாங்கி வந்து வளர்த்து வருகின்றனர். இதற்கு ஏஞ்சல் என பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் 2 வயதான அந்த பூனை தற்போது கருவுற்றது. இதையடுத்து அந்த பூனைக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி வளர்ப்பு பூனை ஏஞ்சலின் கால்களுக்கு சாக்ஸ் அணிவித்து கொலுசு அணிவித்தனர். பின்னர் அலங்காரம் செய்து  பூனைக்கு வளைகாப்பு நடத்தினர். அப்போது மைசூர் பாகு, பிஸ்கெட், பெடிகேர், அல்வா, மிக்சர், தயிர்சாதம், பால் மற்றும் சிக்கன் 65 உள்ளிட்டவை பூனைக்கு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அக்கம்பக்கத்தினரையும் அவர்கள் அழைத்து இருந்தனர். அவர்களுக்கு விருந்தாக பொங்கல் வழங்கினர்.

தற்போது எல்லாம் இதுப்போன்ற செல்லப் பிராணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்படுவது புது ட்ரெண்டாகி வருகிறது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

From around the web