சோகம்: வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கி 1 வயது பெண் குழந்தை பரிதாப உயிரிழப்பு!
Updated: Aug 31, 2026, 11:51 IST
சென்னையை அடுத்த புழல் கண்ணப்பசாமி நகர் 24-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுமித்ரா என்பவருக்கு யோகமாயா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

நேற்று மாலை வீட்டில் உள்ள வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை யோகமாயா விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சுமித்ரா சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து குழந்தையைப் பார்க்க வந்துள்ளார்.

அப்போது வாளியில் உள்ள தண்ணீரில் குழந்தை மூழ்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாகக் குழந்தையை மீட்டுத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
