பேட்மிண்டன் விளையாடிய கராத்தே மாஸ்டர் மயங்கி சரிந்து உயிரிழப்பு!
கேரளாவில் பேட்மிண்டன் விளையாடி முடித்து விட்டு ஓய்வெடுத்த கராத்தே மாஸ்டர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எர்ணாகுளத்தில், பேட்மிண்டன் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கராத்தே மாஸ்டர் ஒருவர், விளையாடி முடித்த பிறகு அங்குள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கிச் சரிந்து விழுந்தார். மைதானத்திலேயே அவர் மயங்கி விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களையும் விளையாட்டு வீரர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
