உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்... அரையிறுதிக்கு முன்னேறி இந்திய ஜோடி சாதனை!

 
badminton

டெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிச்சந்த் ஜோடி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. உலகின்4ம் நிலை வீராங்கனைகளான சீனாவின் ஜியா யி ஃபான் மற்றும் ஜாங் ஷு சியான் ஜோடியை எதிர்த்து இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை இழந்தாலும், சுதாரித்துக்கொண்ட இந்திய ஜோடி அடுத்தடுத்த செட்களை கைப்பற்றியது. இறுதியில் 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி இந்த ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்கு மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் ஒன்று உறுதியாகியுள்ளது.