பகீர்... 6-ம் வகுப்பு மாணவனைச் சுத்தியலால் தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர்!

 
சுத்தியல்

சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவனை உடற்பயிற்சி ஆசிரியர் லோகக் சுத்தியலால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரின் இந்தத் தாக்குதலில் காயமடைந்த மாணவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெ.ஜெ.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் 11 வயது மாணவன் மீதே இந்த அராஜகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வகுப்பறையில் உடற்பயிற்சி ஆசிரியர் நவீன் ஜூட் கோனே (45) என்பவர், எதிர்பாராதவிதமாக அந்த மாணவனை உலோகச் சுத்தியலால் கடுமையாகத் தாக்கியுள்ளார். ஆசிரியரின் தாக்குதலால் மாணவனின் கையில் பலத்த ரத்தக் கசிவு ஏற்பட்டு, கை எலும்பு முறிந்தது.

வலி தாங்க முடியாமல் கதறிய மாணவனை மீட்ட சக ஆசிரியர்களும் பெற்றோரும் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மாணவனின் தாயார் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

தாயாரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஜெ.ஜெ.நகர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி உடற்பயிற்சி ஆசிரியர் நவீன் ஜூட் கோனேவை உடனடியாகக் கைது செய்தனர். ஆசிரியர் எதற்காக மாணவனைச் சுத்தியலால் தாாக்கினார் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.